மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் புதிய ‘மின்சார ஸ்கூட்டர்’ சேவை

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் புதிய ‘மின்சார ஸ்கூட்டர்’ சேவை
மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் புதிய ‘மின்சார ஸ்கூட்டர்’ சேவை
Published on

மெட்ரோ ரயில் நிர்வாகம் ஃப்ளை (FLYY) நிறுவனத்துடன் இணைந்து புதிய மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையின் கிண்டி, ஆலந்தூர், நந்தனம், பரங்கிமலை ஆகிய நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் ஃப்ளை (FLYY) நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஐந்து ரூபாய்க்கு வண்டியை புக்கிங் செய்து ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்ற முறையில் இது வழங்கப்படுகிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஃப்ளை (FLYY) செயலியை பதிவிறக்கம் செய்து பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற அடிப்படை விவரங்களுடன் ஓட்டுநர் உரிமத்தை பதிவு செய்து, ஒரு செல்ஃபியை தட்டி விட்டு, வாகனத்தின் க்யூ.ஆர் (QR) கோடை ஸ்கேன் செய்தால் போதும், வாகனம் தயாராகி விடும். இருசக்கர வாகனத்திற்கு அத்தியாவசியமான ஹெல்மெட்டும், பயணிகளுக்கு இந்த வாகனத்துடன் வழங்கப்படுகிறது. தற்போது சிறப்புச் சலுகையாக 100 ரூபாய் வேலட் (wallet) சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

சாவி இல்லாத இந்த மின்சார வண்டியை, மொபைல் செயலி மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்து கொள்ளலாம். வாகனத்தை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ள சூழலில், நிமிடத்திற்கு 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த மின்சார ஸ்கூட்டர் சேவையை மக்கள் பயன்படுத்தி விட்டு மீண்டும் ஃபளை (FLYY) சேவைகள் வழங்கி வரும் எந்த மையத்திலும் வண்டியை ட்ராப் செய்யலாம்.

விரைவில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. காற்று மாசு, ஒலி மாசு அறவே இல்லாத இந்த மின்சார வாகனத்தின் பயன்பாடு பயணிகள் மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்வதாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com