ஃபானி புயல் சென்னையை நெருங்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதன்பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் இன்று மதியம் புயலமாக மாறியது. அந்தப் புயலுக்கு ஏற்கெனவே ஃபானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஃபானி புயல் நேரடியாக தமிழக கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஃபானி புயல் சென்னையை நெருங்காது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் ஃபானி புயலால் தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேசமயம் இந்தப் புயலால் மழை வருமா..? வராதா என்பது புயல் நகர்வை பொருத்தே தெரியவரும் எனத் தெரிகிறது.