’எங்கிருந்து எங்கேயோ போச்சு’ இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல்.. ஷாக் கொடுத்த சென்னையின் இடம்!

இந்தியாவில் உள்ள தூய்மையான நகரங்களின் வரிசையில் 44 இடத்திலிருந்த சென்னை 199 இடத்திற்கு சென்றது.
தூய்மை சென்னை
தூய்மை சென்னைPT
Published on

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட ஸ்வச் சுவேக்‌ஷன் நகர பட்டியலில் 44 இடத்திலிருந்த சென்னை 199 இடத்திற்கு சென்றது. இது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

இந்தியாவில் தூய்மையான நகரம் எது என்ற ஆய்வு 446 இடங்களிலில் மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல் 100 இடங்களில் தமிழகத்தில் எந்த நகரமுமே வரவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இந்த பட்டியலில் திருச்சிக்கு 112 இடம் கிடைத்துள்ளது.

இதில் சென்னை நகரை எடுத்துக்கொண்டால் 2020ல் 45 வது இடத்திலும், 2021ல் 43வது இடத்திலும், 2022ல் 44 வது இடத்திலிருந்த சென்னை 2023ல் 199 இடத்திற்கு சென்றது என்பது அதிர்சியளிக்கக்கூடிய செய்தி.

இந்த கணக்கெடுப்பானது தனித்தனியாக கணிக்கப்படுகிறது. அதன்படி குப்பைகள் சேகரிப்பில் 9500 புள்ளிகள் பெற்றிருந்தால் முதல் இடம் என்ற புள்ளிகளின் அடிப்படியில் சென்னை 4313 புள்ளிகள் பெற்றுள்ளது. அதாவது பாதி குப்பைகள் சேகரிக்கப்படவில்லை என்பதை குறிக்கிறது.

திறந்தவெளி மலம் கழித்தல் மொத்த புள்ளிகள் 2500; ஆனால் சென்னை பெற்றிருப்பது 725 புள்ளிகள்தான்.

தூய்மை குறித்து சென்னை வாசிகளின் கருத்தின் அடிப்படையில் மொத்த புள்ளிகள் 2170; ஆனால் பெற்றிருப்பது 1204.

குப்பைகளின் மறுசுழற்சி 12%ம், உரமாக்கப்படும் ஆர்கானிக் குப்பைகள் 21% ஆகவும் உள்ளது.

சுத்தமாக உள்ள கழிவறைகள் 77% தூய்மையாக உள்ள நீர்நிலைகள் 85% பிரித்தெடுக்கப்படும் குப்பைகள் 79%

ஆக பெறப்பட்ட மொத்த புள்ளிகளின் அடிப்படையில் 199 வது இடத்தை பெற்றுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபொழுது, “சென்னையில் மெட்ரோ, மழைநீர் வடிகால் பணி நடந்துக்கொண்டிருக்கிறது. இதை தவிர சென்னையில் வளர்ச்சி பணிகள் சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கிறது அதனால் தான் பின் தங்கியுள்ளது. விரைவில் சென்னை தூய்மை சென்னையாக மாறும்“ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com