இதன் பிறகு பாத்திமா வழக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 174 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் (இயற்கைக்கு மாறான மரணம்) வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் சந்தித்து தனது மகளின் மரணத்திற்கு நியாயம் கேட்டு முறையீட வந்தார். ஆனால் சிபிஐ அதிகாரிகள் அவரை சந்திக்க மறுத்து விட்டனர்.