தமிழ் பாடத்தை ஆங்கிலத்திலா எடுப்பார்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ் பாடத்தை ஆங்கிலத்திலா எடுப்பார்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழ் பாடத்தை ஆங்கிலத்திலா எடுப்பார்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்பள்ளிக் கல்வித்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 
தஞ்சை, புத்தநல்லூரில் அரசு உதவி பெரும் பள்ளியில் ஆங்கிலவழி வகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து
பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசுப்பள்ளிகளில் அரசு ஊழியர்களின்குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது?அரசு ஊழியர்கள் ஏன் தங்கள் குழுந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்?பெற்றோர் தனியார் பள்ளிகளை நாட என்ன காரணம்?அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக்கூடாது? ஆங்கில வழிக்கல்விஎனில் தமிழில் பாடம் எடுப்பவர்கள் ஆங்கிலத்தில் எடுப்பார்களா?
உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்படுகிறது? கிராம-மலைப்பகுதி ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் கடைமைகளை செய்யாவிடில் மாணவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. ஆசிரியர்கள் வருகையை சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்காது ஏன்? 2012 முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கிலக் கல்வி கற்கின்றனர்? 2012 அரசாணைப்படி எத்தனை பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது? என தமிழக அரசுக்கு 20 கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பியுள்ளார். மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்த அவர், 2 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com