ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது ஏன் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தர்மபுரி சின்னமானசாவடியில் உள்ள ஒரு ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருவதாகவும் இதை மீட்க வேண்டும் எனவும் கோரி கலையரசி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.