7.5% இடஒதுக்கீடு வழக்கு : இடைக்கால உத்தரவு இல்லை - உயர்நீதிமன்றம்

7.5% இடஒதுக்கீடு வழக்கு : இடைக்கால உத்தரவு இல்லை - உயர்நீதிமன்றம்
7.5% இடஒதுக்கீடு வழக்கு : இடைக்கால உத்தரவு இல்லை - உயர்நீதிமன்றம்
Published on

மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனடிப்படையில் மருத்துவ கலந்தாய்வும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பள்ளி மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கத்தோலிக் கல்வி நிறுவனங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஏற்கெனவே பல்வேறு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் 7.5% இட ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது என்பது தங்களுக்கான உரிமைகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில் ஏற்கெனவே கலந்தாய்வு நடைபெற்று மாணவர்சேர்க்கை முடிந்துவிட்டதாகவும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து பதிலளிக்க 2வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த சட்டத்தை எதிர்த்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி 2 வாரத்திற்குள் பதில் மனுத்தாக்கல் செய்யகோரி உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com