தமிழ்த்தாய் வாழ்த்து யாரும் பாடுவதில்லை என்றும், வழக்கறிஞர் பணி தொழில் அல்ல என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதால் சக்தி பிறக்கிறது என்று கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை யாரும் வாய் திறந்து பாடுவதில்லை என அவர் வேதனை தெரிவித்தார். அத்துடன் திருக்குறளை உதாரணமாக்கிய காந்தியடிகள் அகிம்சை வழியில் மாறினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதிபதி பிரகாஷ் பேசும் போது, “பொறியாளர்கள், மருத்துவர்கள் தீங்கிழைத்தால் இறக்குமதி செய்யலாம். வழக்கறிஞர்கள் சீர்கெட்டு போனால் இறக்குமதி செய்ய முடியாது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. வழக்கறிஞர் பணி என்பது தொழில் அல்ல; சேவை. வழக்கறிஞர் தொழிலை வியாபாரமாக்கினால் ஜனநாயகம் அடிவாங்கும். சுதந்திரம் இருக்காது” என்று கூறினார்.