தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்த செப்.30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்த செப்.30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு
தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்த செப்.30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு
Published on

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இதுவரை 75 புகார்கள் வந்துள்ளதாக பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலித்த 29 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூறியது.

இதையடுத்து பேசிய நீதிபதி, நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தாத பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தது. அத்துடன் அரசின் உடனடி நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்து, வழக்கு விசாரணை செப்டம்பர் 23ஆம் தேதி ஒத்திவைத்தது.

அத்துடன் பள்ளிகளுக்கான முதல் தவணை 40 சதவீதத்தை செலுத்த ஆகஸ்ட் 31 என்ற காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீதிமன்றம் நீட்டிப்பு செய்தது. கூடுதல் கட்டணத்தை வசூலித்த பள்ளிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய பள்ளி கல்வி துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com