குற்றப் பின்னணி கொண்டவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரியை சேரந்த ஜனா என்பவரது குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், குற்றவாளிகள் அரசியலில் நுழைந்து கொள்கை உருவாக்குபவர்களாக மாறி விடுவது வேதனையளிப்பதாக இருக்கிறது எனக் கூறினார்.
குற்றப் பின்னணி உள்ளவர்களக்கு அரசியலில் இடம் அளிப்பதை அரசியல் தலைவர்கள் தவிர்த்தாலே அரசியல் தூய்மை அடைந்து விடும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், ரவுடிகள் அரசியலுக்கு வருவதை தடுக்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தினார்.