விஜயதசமிக்கு கோயில்கள் திறக்கப்படுமா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

விஜயதசமிக்கு கோயில்கள் திறக்கப்படுமா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
விஜயதசமிக்கு கோயில்கள் திறக்கப்படுமா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு, இன்று மதியம் 1.30 மணிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்னுசாமி என்பவர் இதுகுறித்த அளித்திருந்த மனுவில், ‘ஒவ்வொரு வருடமும் நவராத்திரியின் இறுதிநாளான விஜயதசமியன்று கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அந்த மனநிலையை புரிந்துக்கொள்ளாமல், தமிழக அரசு தொடர்ந்து கோயில்களை மூடிவருகிறது. அப்படி இந்த வாரம் வெள்ளிக்கிழமை கோயில்களை அரசு மூடியே வைத்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லாமல், கோயில்களை அரசு திறக்க வேண்டும்’ எனக்குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு விசாரணையில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ‘கொரோனா பரவல் அச்சத்தை தடுக்கவே அரசு வார இறுதி நாள்களில் கோயில்களை மூடி வருகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மகாதேவன், ‘இந்த வாரம் வெள்ளியன்று விஜயதசமி வருகிறது. இந்து மத அடிப்படையில் துர்கா பூஜை - கொலு வைப்பு போன்றவற்றின் மூலம் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைகிறது. ஆகவே இந்த நாளன்று கட்டுப்பாடுகளுடன் கோயில்களை திறக்க வாய்ப்பிருக்கிறதா? இன்று மதியம் 1.30 மணிக்குள் இதுகுறித்து அரசிடம் விளக்கம் பெற்று சொல்லவும்’ எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com