நளினி சிதம்பரத்திற்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

நளினி சிதம்பரத்திற்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்
நளினி சிதம்பரத்திற்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்
Published on

சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால‌ முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் இருந்து 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வசூலித்து அதை திரும்பத் தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் தொடர்புள்ளதாக கூறி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

சாரதா குழும நிறுவனங்களில் இருந்த மக்கள் பணத்தை அதன் நிர்வாகிகள் முறைகேடாக பயன்படுத்திய விவகாரத்தில் நளினி சிதம்பரமும் உடந்தையாக இருந்ததாக கூறி வழக்குப் பதியப்பட்டுள்ளது. அத்துடன் சாரதா சிட்பண்ட் நிர்வாகத்திடம் இருந்து நளினி சிதம்பரம் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயை சட்டவிரோதமாக பெற்றதாகவும் சிபிஐ தன் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நளினி சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே இவ்விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி நளினி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நளினி சிதம்பரத்திற்கு 4 வாரங்களுக்கு இடைக்கால‌ முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com