பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்கதையாக உள்ளது எனவும் நீதிமன்றம் குற்றம்சாட்டியது. உயரிழப்புக்கு ரூ.2 இலட்சம் கருணைத் தொகை தந்தால் பிரச்னை முடிந்துவிடும் என கருதுவதாகவும் நீதிபதிகள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தது தொடர்பான முறையீட்டின் போது உயர்நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது. இந்த வழக்கை தற்போது உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது.