போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்களை வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
போக்குவரத்து சிக்னல்களில் உள்ள விளம்பர பேனர்களால் விபத்துக்கள் ஏற்படுவதாக கோவையை சேர்ந்த நுகர்வோர் மையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்களை வைக்க தடை விதித்து உத்தரவிட்டது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதற்கான காலம் முடிந்தவுடன், அனுமதியை புதுப்பிக்கக் கூடாது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உயிரோடு இருக்கும் நபர்களின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.