அரவிந்த்சாமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

அரவிந்த்சாமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை
அரவிந்த்சாமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை
Published on

நடிகர் அரவிந்த்சாமிக்கு எதிராக வருமான வரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரியாக 96 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை நடிகர் அரவிந்த் சாமியின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்ய அண்ணா சாலையில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி வங்கி கிளைக்கு வருமான வரித் துறை உதவி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த்சாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் ஏற்கெனவே தோராய வருமான வரியாக ரூபாய் 30 லட்சத்தை முன் கூட்டியே செலுத்தியுள்ளேன். எனது தோராய வருமான வரியை அதிகாரிகள் பரிசீலிக்காமல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனவே நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தோராய வருமானவரி செலுத்திய விண்ணப்ப படிவத்தை பரிசீலிக்கும் வரை மேற்கொண்டு அரவிந்த்சாமி வங்கிக் கணக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com