'கொரோனா' இறப்பு சான்றுகளை ஆய்வுசெய்க - உயர் நீதிமன்றம் உத்தரவு

'கொரோனா' இறப்பு சான்றுகளை ஆய்வுசெய்க - உயர் நீதிமன்றம் உத்தரவு
'கொரோனா' இறப்பு சான்றுகளை ஆய்வுசெய்க - உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வுசெய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் நிகழும்போது இறப்பு சான்றிதழில் ‘கொரோனாவால் மரணம்’ என குறிப்பிடாமல் இணைநோய்களால் மரணம் என்று குறிப்பிடுவதாக குற்றம்சாட்டி ஸ்ரீராஜலட்சுமி என்ற வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருந்தார். மேலும், இதனால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரணத்தை பெறமுடியவில்லை என்றும், கொரோனாவால் ஏற்படும் மரணத்தை இறப்புச் சான்றிதழில் குறிப்பிடவேண்டும் என்றும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொரோனா மரணம் முறையாக பதிவுசெய்யப்படவில்லை என நாடுமுழுவதுமே புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. இறப்பு பற்றி தெளிவான பதிவு இருந்தால்தான் தொற்றை சமாளிக்க, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கொரோனா காலத்தில் இணைநோயால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர்கள்மூலம் ஆய்வுசெய்யவேண்டும் என்றும், இந்த ஆய்வு செய்தது குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை 28ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com