சென்னை: கதவை திறந்தும் வராத லிப்ட் - கால் தவறி கீழே விழுந்த காவலாளி உயிரிழப்பு

ராஜகீழ்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் பழுதானதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் ஒரு காவலாளி. லிப்டை முறையாக பராமரிக்காததுதான் காவலாளி உயிரிழப்பிற்கு காரணம் என குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கால் தவறி கீழே விழுந்த காவலாளி உயிரிழப்பு
கால் தவறி கீழே விழுந்த காவலாளி உயிரிழப்புpt desk
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த ராஜகீழ்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 14 பிளாக்குகள், 4 அடுக்குமாடி குடியிருப்புகளாக, மொத்தம் 420 வீடுகள் உள்ளன. இங்கு கடந்த சில தினங்களாக காவலாளியாக நட்ராஜ் (56) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இன்று வழக்கம் போல் பிளாக் 2ல் பி பிரிவில் நான்காவது மாடியில் உள்ள மாடியின் கதவை மூடிவிட்டு, அங்கிருந்து லிப்டை இயக்கியுள்ளார்.

கால் தவறி கீழே விழுந்த காவலாளி உயிரிழப்பு
கால் தவறி கீழே விழுந்த காவலாளி உயிரிழப்புp;t desk

அப்போது லிப்டின் கதவு திறந்துள்ளது. ஆனால் லிப்ட் வரவில்லை. இதனை கவனிக்காத காவலாளி கால்களை உள்ளே வைத்துள்ளார். அப்போது கால் தவறி நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது மாடியில் விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

கால் தவறி கீழே விழுந்த காவலாளி உயிரிழப்பு
விழுப்புரம்: கட்டுப்பாட்டை இழந்து கார் மோதிய விபத்து - இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உயிரிழப்பு

பழுதாகி இருந்த லிப்ட்டை சரியாக பராமரிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com