சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஃபார்முலா கார் பந்தயம் நடத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயம், சென்னை உயர்நீதிமன்றம்
ஃபார்முலா 4 கார் பந்தயம், சென்னை உயர்நீதிமன்றம்pt web
Published on

ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.7 கிலோமீட்டர் தூரத்திற்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரசாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, ஏற்கனவே உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு விதித்த நிபந்தனைகளின் படி, ‘போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது; பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’ என தமிழக அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

ஃபார்முலா 4 கார் பந்தயம், சென்னை உயர்நீதிமன்றம்
"வாழையடி சிறுகதை அருமை! எழுத்தாளர் சோ.தர்மனுக்கு நன்றி" தனது பாணியில் ரிப்ளை கொடுத்த மாரி செல்வராஜ்!

மேலும், எஃப் ஐ ஏ எனும் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு சான்று பெற்ற பிறகே, கார் பந்தயம் நடத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவாதமும் அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வு, ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோரின் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

ஃபார்முலா 4 கார் பந்தயம், சென்னை உயர்நீதிமன்றம்
ஆவடி|கடனிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு நாடகமா? தமிழக போலீசாரை ராஜஸ்தான் வரை அலைக்கழித்த நபர்கள் கைது!

பந்தயம் நடத்தப்படும் நாளில் பகல் 12 மணிக்குள் பந்தயம் நடத்துவதற்கான அனுமதிச் சான்றை எஃப் ஐ ஏ வழங்க வேண்டும் எனவும் அந்தச் சான்றின் நகலை மனுதாரர் தரப்புக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மீறினால் அதை நீதிமன்றம் தீவிரமாக கருதும் என தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு ஆறு வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com