பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுத்த சென்னை உடற்பயிற்சி நிபுணர்! பின்னணி காரணம் இதுதான்!

சென்னையில் நடைபெறும் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களுக்குச் சென்னையைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் உதவி வருகிறார்.

சென்னையில் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பாகிஸ்தான் அணி முக்கியமான அணிகளில் ஒன்றாக உள்ள நிலையில் அந்த அணிக்கு ஃபிசியோ எனப்படும் உடற்பயிற்சியாளர் இல்லாத நிலை உள்ளது. உரிய ஒப்புதல் கிடைக்காததால் வழக்கமான உடற்பயிற்சியாளர் இந்தியா வர இயலவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு ஹாக்கி அணிக்கு உடற்பயிற்சியாளராக இருந்த ராஜாகமல் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் பாகிஸ்தானுக்கு உதவும் பணியில் இணைந்துள்ளார். ராஜாகமல் தரும் பயிற்சி பயனுள்ளதாக உள்ளது என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் முகமது சக்லைன்.

”ஏற்கெனவே ஹாக்கி போட்டிகளில் பணியாற்றி உள்ளதால் தற்போது வீரர்களை தயார் செய்வதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றும், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் தம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ராஜாகமல் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com