சென்னை| நள்ளிரவில் காற்றுடன் பெய்த கனமழை - இரும்பு பதாகை விழுந்து பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

ரேணுகா வீட்டிற்கு செல்ல தரமணி டிஎல்எப் வளாகத்திற்குள் நடந்து சென்றபோது அதிகப்படியான காற்றுடன் மழை பெய்த காரணத்தினால், தரையில் வைத்திருந்த இரண்டு இரும்பு டிஎல்எப் போர்டுகள் பெண்ணின் மீது விழுந்துள்ளது.
சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்புதிய தலைமுறை
Published on

கனமழையுடன் கூடிய காற்றினால் DLF இரும்பு போர்டுகள் சரிந்து விழுந்ததில் பெண் தூய்மைப் பணியாளர் உயிரிழந்தார்.

அசாம் மாநிலத்தை பூர்விகமாக கொண்டு நீலாங்கரை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் ரேணுகா(30). கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்துடன் தங்கி தரமணி 100 அடி சாலையில் உள்ள டிஎல்எப் பில்டிங்கில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

நேற்று இரவு வேலை முடித்துவிட்டு ரேணுகா வீட்டிற்கு செல்ல தரமணி டிஎல்எப் வளாகத்திற்குள் நடந்து சென்றபோது அதிகப்படியான காற்றுடன் மழை பெய்த காரணத்தினால், தரையில் வைத்திருந்த இரண்டு இரும்பு டிஎல்எப் போர்டுகள் பெண்ணின் மீது விழுந்துள்ளது.

இதில் படுகாயம் அடைந்த ரேணுகாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தரமணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடந்த சம்பவம் குறித்து நமது செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்

சம்பவம் நடந்த இடம்
உ.பி | 40 நாட்களில் இளைஞருக்கு 6 முறை பாம்பு கடி - சனிக்கிழமை ஆனா கடிக்குதா? விநோதமா இருக்கே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com