விடுதிகளுக்கு பதிவுச்சான்று, உரிமம் பெறாவிடில் 2 ஆண்டுகள் சிறை

விடுதிகளுக்கு பதிவுச்சான்று, உரிமம் பெறாவிடில் 2 ஆண்டுகள் சிறை
விடுதிகளுக்கு பதிவுச்சான்று, உரிமம் பெறாவிடில் 2 ஆண்டுகள் சிறை
Published on

சென்னையில் விடுதிகளுக்கு பதிவுச் சான்று, உரிமம் பெறாவிடில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில், குளியல் அறையில் கேமரா பொருத்தப்பட்ட விவகாரத்தில் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் விடுதியில் கேமரா பொருத்தப்பட்டிருந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள விடுதிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ளார். 

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:-

  • சென்னையில் உரிய அதிகாரிகளால் ஒப்புதல் தரப்பட்ட கட்டடங்களில்தான் விடுதி, காப்பகம் அமைக்க வேண்டும்.
  • விடுதி நடத்துவோர் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பதிவு சான்று, உரிமம் பெற வேண்டும்.
  • பதிவு பெற்ற விடுதிகளின் பெயர்பட்டியல், முகவரியோடு டிச.31க்குள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • 2019 ஜனவரி முதல் பதிவின்றி இயங்கும் எந்த விடுதியிலும் பெண்கள், குழந்தைகளை தங்க வைக்க வேண்டாம்.
  • பதிவின்றி இயங்கும் விடுதிகள் குறித்து 9444841072 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்.
  • புகார் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
  • 2019 ஜனவரி முதல் பதிவின்றி இயங்கும் எந்த விடுதியிலும் பெண்கள், குழந்தைகளை தங்க வைக்க வேண்டாம்.
  • ஆண், பெண் ஆகியோருக்கு தனித்தனி கட்டடம் அமைக்க வேண்டும்.
  • பெண்கள் விடுதியாக இருப்பின் அதன் காப்பாளராக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
  • விடுதி நடத்துவோர் தீயணைப்பு, காவல்துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளிடம் உரிய உரிமம் பெற வேண்டும். 
  • மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் பதிவு செய்து அத்தாட்சி பெற்ற பின்னரே விடுதிகளை இயக்க வேண்டும்.
  • 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிகாப்பாளரும், 24 மணி நேரத்துக்கான பாதுவாலர்களும் நியமிக்கப்பட வேண்டும்.
  • 50க்கும் மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களில் சிசிடிவி கேமரா, டிவிஆர் பொருத்தப்பட வேண்டும்.
  • சென்னையில் 8 விடுதிகள் பதிவு கோரி விண்ணப்பம் தந்துள்ளன. 100 விடுதிகளை பதிவு செய்ய விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com