சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்..பாதுகாப்பு எப்படி?:- சுங்கத்துறை விளக்கம்

சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்..பாதுகாப்பு எப்படி?:- சுங்கத்துறை விளக்கம்
சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்..பாதுகாப்பு எப்படி?:- சுங்கத்துறை விளக்கம்
Published on

சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நிலை குறித்து சுங்கத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தின் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் வெடித்து சிதறியது. உல‌‌கையே திரும்பிப் பார்க்க வைத்த‌ இந்த கோரச் சம்பவம்‌, அம்மோனியம் நைட்ரேட் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தியுள்ளது.‌ மனி‌த வரலாற்றில் அணு பயன்படுத்தப்படாத மிகப்பெரிய வெடி விபத்தாக இது பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் சுங்கத்துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் சென்னை துறைமுக‌க் கிடங்கில் சேமித்து வைக்கப்ப‌ட்டுள்ளதாக தகவல் கசிந்தது‌.

கடந்த 2015ம் ஆண்டு உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்,‌ இன்னும் அப்புறப்படுத்தவில்லை என தகவல் வெளியான நிலையில், தற்போது சுங்கத்துறை தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில், திருவொற்றியூர் சுங்கத்துறை ஒப்பந்த கிடங்கில் உள்ள 18 ஏக்கர் இடத்தில் முழு பாதுகாப்புடன் அம்மோனியம் நைட்ரேட் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 37 கண்டெய்னர்களில் தலா 20 டன் என மொத்தம் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை 25 கிலோ பாலிப்ரோபெலின் பைகளில் அடைக்கப்பட்டு பத்திரப்பட்டுள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அவை அங்கிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கரூரில் உள்ள ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் இருந்து சட்டப்பூர்வ நடவடிக்கையின்படி, இவை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த கிடங்கை கண்காணிக்க 7 உயர் அதிகாரிகள் கொண்டு குழு பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும், கிடங்கிற்கு வடக்கு பகுதியில் 700 மீட்டர் தூரத்திற்கு பிறகே மணலி நியூ டவுன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தெற்கு பகுதியில் 1.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிறகே சடையான்குப்பன் கிராமம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே அம்மோனியம் நைட்ரேட் முழு பாதுகாப்புடன் இருப்பதாகவும், இதனை அப்புறப்படுத்தவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com