சென்னை ஊரடங்கு விதிமீறல் : 2,079 வழக்குப்பதிவு – 1,727 வாகனங்கள் பறிமுதல்

சென்னை ஊரடங்கு விதிமீறல் : 2,079 வழக்குப்பதிவு – 1,727 வாகனங்கள் பறிமுதல்
சென்னை ஊரடங்கு விதிமீறல் : 2,079 வழக்குப்பதிவு – 1,727 வாகனங்கள் பறிமுதல்
Published on

சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆயிரத்து 727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு விதிகளை அலட்சியப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சென்னையில் சட்டம் -ஒழுங்கு காவல் துறையினர் 200 இடங்களிலும், போக்குவரத்து காவல்துறையினர் 118 இடங்களிலும் தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் போக்குவரத்து காவல் துறையினர் நடத்திய தணிக்கை மற்றும் சோதனையில் தேவையின்றி வெளியே வந்ததாக ஆயிரத்து 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 169 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகு ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல சட்டம்- ஒழுங்கு பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் 969 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆயிரத்து 541 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக ஆயிரத்து 346 வழக்குகளும், தனிமனித இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 83 வழக்குகளும், அரசு அறிவித்த நேரத்தை மீறி கடையை திறந்திருந்ததாக 64 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் ட்ரோன்கள் மூலமும் ஊரடங்கு விதிமுறை மீறுபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com