கொரோனா பாதித்தவர் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் - சென்னை மாநகராட்சி

கொரோனா பாதித்தவர் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் - சென்னை மாநகராட்சி
கொரோனா பாதித்தவர் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் - சென்னை மாநகராட்சி
Published on

கொரோனா தொற்று பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வெளியே வருபவர்களுக்கும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதோருக்கும் காவல்துறை அபராதம் விதித்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே சுற்றுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்று பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளியே நடமாடும்போது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதத்துடன் கொரோனா மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெளியே நடமாடுபவர்கள் பற்றி தெரியவந்தால் 044-2538 4520 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com