சென்னையில் மழை பாதிப்பு உள்ளிட்ட விவரங்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் மழைநீர் தேக்கம், மரங்கள் சாய்ந்திருப்பது உள்ளிட்ட பாதிப்புகள் நேரிட்டால் மக்கள் உடனடியாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 044 - 25384520, 25384530, 25384540 ஆகிய எண்களில் புகார்களை அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாக மழை பாதிப்பு குறித்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகளையும் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளது. இதனிடையே, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.