எதிர்ப்பு எதிரொலி | ”கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்படாது” - சென்னை மாநகராட்சி மேயர் அறிவிப்பு!

சென்னையில் 9 கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாணவர்களின் நலன் கருதி எப்போதும் போல தொடரும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தனியார் மயமாக்கப்படும் கால்பந்து திடல்கள்
தனியார் மயமாக்கப்படும் கால்பந்து திடல்கள்PT
Published on

ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மிக முக்கியமான தீர்மானமாக “சென்னையில் அமைந்துள்ள 9 கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும்” தீர்மானம் இருந்தது.

இது அங்குக் கால்பந்து பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அங்கு விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வரும் கால்பந்து வீரர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் மயமாக்கப்படும் கால்பந்து திடல்கள்
சென்னை மாநகராட்சி| கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு.. இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

எழுந்த கடுமையான எதிர்ப்பு..

கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கால்பந்து வீரர்கள் கூறுகையில், “நாங்கள் நீண்ட காலமாக இங்கு தான் கால்பந்து பயிற்சிகள், உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இப்படி தனியார் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டால் கால்பந்து வீரர்கள், இளைஞர்கள் என அனைவரும் கட்டணம் கொடுத்தே வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அது உத்வேகத்துடன் இருக்கும் எங்களை போன்றோருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என கவலை தெரிவித்தனர்.

கால்பந்து திடல்
கால்பந்து திடல்PT

மேலும் திறமை இருக்கும் ஏழை, எளிய வீரர்களின் விளையாட்டு வாய்ப்பை பறிக்கும் செயல்பாடாக உள்ளதால், இதைக் கண்டித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறினர். இது செய்திகளில் வெளியாகி பொதுமக்களிடையேயும் எதிர்ப்பை பெற்றது.

இந்நிலையில் கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்படாது என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் நலன் கருதி எப்போதும் போல செயல்படும்..

கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்படுவது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சென்னை மேயர், “மாணவ - மாணவியர்களின் கோரிக்கையினையேற்று,

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை கட்டணம் ஏதுமின்றி தொடர்ந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க பெருநகர சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இவ்விளையாட்டுத் திடல்களின் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும் எனத் தெரிவித்துக கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

9 கால்பந்து திடல்கள் பின்வருவன,

1. முல்லை நகர், வியாசர்பாடி செயற்கை கால்பந்து மைதானம்

2 நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள செயற்கை கால்பந்து மைதானம்

3. தி.ரு.வி.க. நகர் விளையாட்டு மைதானம் செயற்கை கால்பந்து மைதானம்

4. ரங்கசாயி விளையாட்டு மைதானம்

5. கேபி பார்க் விளையாட்டு மைதானம் செயற்கை கால்பந்து மைதானம்

6. மேயர் சத்தியமூர்த்தி சாலை (டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மைதானம்)

7. அம்மா மாளிகை, கோடம்பாக்கம் மெயின் ரோடு

8 காமகோட்டி நகர், 6வது தெரு செயற்கை கால்பந்து மைதானம்

9. சோழிங்கநல்லூர் ஃபஸ்டல் (OMR) செயற்கை கால்பந்து மைதானம்

தனியார் மயமாக்கப்படும் கால்பந்து திடல்கள்
”இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள்..” - கட்சி தோழர்களுக்கு தவெக தலைவர் விஜய் நன்றி அறிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com