தொடரும் பஸ் கட்டண உயர்வு: தினசரி, மாதாந்திர பாஸ்-ம் காலி!

தொடரும் பஸ் கட்டண உயர்வு: தினசரி, மாதாந்திர பாஸ்-ம் காலி!
தொடரும் பஸ் கட்டண உயர்வு: தினசரி, மாதாந்திர பாஸ்-ம் காலி!
Published on

சென்னை மாநகரத்தின் அரசு பேருந்துகளின் தினசரி மற்றும் மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த மாதம் 20ஆம் அரசுப் பேருந்துகளின் பயணக் கட்டணம் 60 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்க்கட்களின் வலியுறுத்தல்களுக்குப் பிறகு சிறிய அளவில் கட்டணம் குறைக்கப்பட்டது. இதனால் பேருந்தில் பணிக்கு செல்பவர்களும், பயணிப்பவர்களும் அதிருப்தி அடைந்ததாக தெரிவித்திருந்தனர். இதுகுறித்து விளக்கமளித்த தமிழக அரசு வேறு வழியின்றி கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. அத்துடன் கட்டண உயர்வின் படியும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்துத்துறையில் ரூ.4 கோடி இழப்பீடு ஏற்படும் என்றும் கூறியிருந்தது. மேலும் மாதந்திர மற்றும் தினசரி பாஸ் கட்டணம் உயர்த்தப்படாது என்றும், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாஸ் தொடரும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை மாநகர பேருந்துகளின் தினசரி மற்றும் மாதாந்திர பாஸ்-களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தினசரி பாஸ் விலை ரூ.50 லிருந்து ரூ.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதந்திர பாஸ் விலை ரூ.1,000 லிருந்து ரூ.1,300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அடிப்படையில் வரும் 14ஆம் தேதி முதல் புதிய பாஸ்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சென்னை பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com