வேளச்சேரியில் தி வெட்டிங் பிரியாணி கடையில் சமூக இடைவெளியின்றி பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திறப்பு விழா அன்றே கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரியில் தி வெட்டிங் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை இன்று புதிதாக திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக விலையில் 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்திருந்தனர். இதனை அறிந்த பொது மக்கள் காலை முதலே கடையின் முன்பு கூட ஆரம்பித்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததால் மாநகராட்சி அதிகாரிகள் வந்து கடையை மூடும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் கொரோனா பரவவில்லையா இப்போது மட்டும் பரவுமா என்று வாக்கு வாதம் செய்தனர். மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு அரை மணி நேரம் அனுமதி வழங்கினர். அதற்குள் பில் வாங்கிய நபர்களுக்கு பிரியாணி கொடுத்துவிடும் படி கூறினர். பின்னர் கடைக்கு சீல் வைத்தனர்.