சென்னை: விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற ஆயுதப்படை போலீசாருக்கு பாராட்டு

சென்னை: விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற ஆயுதப்படை போலீசாருக்கு பாராட்டு
சென்னை: விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற ஆயுதப்படை போலீசாருக்கு பாராட்டு
Published on

தமிழக காவல்துறை புலனாய்வில் சிறந்த விளங்குவது போல் விளையாட்டு போட்டிகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் அனுராதா, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான பளுதூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைகள் புரிந்துள்ளார்.

நேபாளத்தில் 2019-ம் ஆண்டு நடந்த 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவில் உள்ள சமோவா தீவில் 2019-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று தங்க பதக்கம் வென்று தமிழ்நாடு காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், தற்போது ஹரியானா மாநிலம் மதுபானில் நடைபெற்ற 68வது அகில இந்திய காவல்துறை மல்யுத்த குழு விளையாட்டு போட்டியில் பங்கேற்று 220 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்று உதவி ஆய்வாளர் அனுராதா சாதனை புரிந்துள்ளார்.

இவருக்கு தமிழக அரசு சார்பில் ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். பளுதூக்குதல் போட்டிகளில் பங்கேற்று இதுவரை 9 தங்க பதக்கங்களை வென்றுள்ள அனுராதா அடுத்ததாக காமன்வெல்த் போட்டிக்காகவும், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காகவும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தார்.

68வது அகில இந்திய காவல்துறை மல்யுத்த குழு விளையாட்டு போட்டியில் தமிழக காவல் துறையைச் சேர்ந்த அனூராதா உட்பட 5 பேர் பதக்கம் வென்று சாதித்துள்ளனர். குறிப்பாக குத்துச்சண்டை போட்டியில் ஆயுதப்படை பெண் தலைமை காவலர் அமுதா வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். காவல் துறையில் பெண் காவலர்கள் யாரும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பதால் தற்போது அமுதா குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க பெண் காவலர்கள் தைரியமாக முன் வரவேண்டும் என்று அமுதா தெரிவித்தார்.

பதக்கங்கள் வென்ற 5 பேருக்கும் ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி தமிழக அரசின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆயுதப்படை போலீசார் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். 700 ஆயுதப்படை போலீசார், இது போன்ற 36 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்தார்.

தங்களுக்கு காவல் துறையில் வேலை கிடைத்து விட்டது. இனிமேல் விளையாடத் தேவையில்லை என திறமையுள்ள காவலர்கள் ஒதுங்கி செல்லாமல் தொடர்ந்து விளையாடி தமிழக காவல் துறைக்கு பெருமை சேருங்கள் என பதக்கம் வென்ற காவலர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com