சென்னையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள். ஒரு உடலை எரிக்க நீண்ட நேரம் காத்திருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் போதிய படுக்கை மற்றும் ஆக்சிஜன் இல்லாததால் மருத்துவமனை வாசலிலேயே சிகிச்சைக்காக ஏராளமானோர் ஆம்புலன்சில் காத்திருக்கும் காட்சிகளை தினந்தோறும் காணும் நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனவர்களின் உடல்களை தகனம் செய்ய நீண்ட நேரம் காத்திpருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அம்பத்தூர் மின்மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுடுகாட்டின் முன் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காணமுடிகிறது. ஒரு உடலை எரியூட்ட சுமார் 2 மணி முதல் 3 மணி நேரம்; ஆகிறது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்கள் சுடுகாட்டின் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.