அட்சய திருதியையொட்டி குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி கொடுத்துள்ள அறிக்கையில், 2006-ஆம் ஆண்டு திருமணச் சட்டப்படி, 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி குற்றமாகும். அட்சய திருதியையொட்டி குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது எனவும், எனவே அதை தடுக்க வேண்டும் எனவும் சென்னை ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனவே இதுகுறித்த புகார்களை குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர், காவல்துறை, முதல் வகுப்பு நீதிபதி, பெருநகர நீதிபதி, குழந்தைகள் நல குழுமம், ஊராட்சி அலுவலக கண்காணிப்பு குழு போன்ற அதிகாரிகள் மற்றும் 1098 என்ற எண்ணுக்கும் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் 2006 சட்டத்தின்படி குழந்தை திருமணத்தை நடத்துவோருக்கு 2 ஆண்டுவரை சிறைதண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.