சென்னையில் நாளை 50 சதவித மாநகர பேருந்துகள் இயங்கும் !

சென்னையில் நாளை 50 சதவித மாநகர பேருந்துகள் இயங்கும் !
சென்னையில் நாளை 50 சதவித மாநகர பேருந்துகள் இயங்கும் !
Published on

பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் நாளை 50 சதவித மாநகர பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் மார்ச் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 370 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி இன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்து தமிழக அரசு தன்னுடைய முடிவை இன்று அல்லது நாளை காலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மார்ச் 31 ஆம் தேதி வரை இயங்காது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 31 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில்கள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகரப் போக்குவரத்துகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இப்போதும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது, அதில் "பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு 50 சதவிதமான மாநகர பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ( வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள், மருத்துவ விடுப்பு, முன் கூட்டியே விடுப்பு எடுத்தவர்கள் தவிர) பிறர் பணிக்கு வருவார்கள். ஒட்டுனர்கள், நடத்துனர்கள் முக கவசம் அணியவும், ஒரு சுற்றுப் பயணம் முடிந்தததும் கை கழுவ வேண்டும் என அறிவுறுத்தல்.காலை 5 மணி முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படும். பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் வேண்டுகோள். சென்னை நகரில் 3400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com