சென்னை|தி நகரில் கடத்தப்பட்ட 45 நாட்களே ஆன குழந்தை.. திருவேற்காட்டில் பத்திரமாக மீட்பு! நடந்ததுஎன்ன?

கண்ணகி நகரில் அரசு நிதி உதவி பெற்றுத் தருவதாகக் கூறி பெண் ஒருவர் பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்திச் சென்ற வழக்கில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
குழந்தை மீட்பு
குழந்தை மீட்புpt desk
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர்கள் நிஷாந்தி - ஆரோக்கியதாஸ் தம்பதி. இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்து 45 நாட்கள் ஆன குழந்தையை பெண் ஒருவர், அரசு நிதி உதவி வாங்கித் தருவதாகக் கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து நிஷாந்தியை தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வைத்து அவர், கைகழுவச் சென்ற போது அவரது குழந்தையை தூக்கிக் கொண்டு அந்தப் பெண் தப்பியோடியுள்ளார்.

குழந்தை மீட்பு
குழந்தை மீட்புfile

குழந்தை காணாமல் போன பரிதவிப்பில் தாய் கதறி அழுதுள்ளார். பின்னர் இது குறித்து கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தார்.

இதற்கிடையே திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வலிப்பு நோய் சிகிச்சைக்காக உள்நோயாளியாக கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் குழந்தையின் பிறப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர் இதற்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குழந்தை மீட்பு
"அவங்களும் மனுசங்க தானே? - அரசு மருத்துவர்கள் நோயாளிகளை எப்படி நடத்துகிறார்கள்.. மக்கள் கருத்து!

இதனிடையே அப்பெண் நேற்றிரவு மருத்துவமனையில் குழந்தையை விட்டு தப்பித்து சென்றுள்ளார். தற்போது திருவேற்காடு போலீசார் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கண்ணகி நகர் போலீசார், குழந்தையை கைப்பற்றிய நிலையில், காணாமல் போன குழந்தைதான என உறுதி செய்ய பெற்றோரை வரவழைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com