சென்னை விமானநிலைய விரிவாக்கத்திற்கு இந்திய விமான போக்குவரத்து ஆணையம் கோரிய நிலத்தை அளிக்க பாதுகாப்புத்துறை
மறுத்துள்ளது.
தமிழகத்தில் விமான நிலையங்களின் விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துதல் பணி தீவரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் தமிழக அரசு சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் தூத்துகுடி விமானநிலையங்களின் விரிவாக்கத்திற்கு
தேவைப்படும் கூடுதல் நிலம், அதை கையகப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அந்தந்த பகுதிகளில்
விமான நிலையங்களின் விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
சென்னை விமானநிலைய விரிவாக்கத்தில் இதுதொடர்பாக விமானங்களை நிறுத்துவது, விமான சேவையை அதிகரிப்பது
உள்ளிட்டவற்றிற்காக ராணுவ பயிற்சி மையத்திடம் இருந்து 40 ஏக்கர் நிலத்தை இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் கோரியது.
ஆனால், 8.5 ஏக்கர் நிலத்தை மட்டுமே தருவதற்கு ராணுவ பயிற்சி மையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனவே விமான நிலையத்தில்
விமானங்களைப் பராமரிப்பது உள்ளிட்ட கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமானப்
போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் அகலமான விமானங்கள் வந்து இறங்கும் வசதியில்
தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.