சென்னையில் புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தநிலையில் தற்போது விமான சேவை வழக்கம் போல் சீராக்கப்பட்டுள்ளது என்று விமானநிலையம் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தை திருநாளாம் பொங்கல் திருநாளின் முதல்நாளான இன்று அதிகாலை முதலே மக்கள் அனைவரும் போகி பண்டிகையை முன்னிட்டு ’ பழையன கழிதலும் புதியன புகுதலும் ‘ என்பதற்கிணங்க பழைய பொருட்களை எரிக்கதுவங்கி இருக்கின்றன. இதனால் காற்றின் தரம் என்பது மோசமடைந்து காணப்படுகிறது.
இந்தவகையில் காலையில் பனி, புகை மூட்டம் காரணமாக விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது விமான போக்குவரத்து சீரானது என்று விமான நிலையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான போக்குவரத்து சீரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரக்குறியீடு:
சென்னையை பொருத்தமட்டில் பல இடங்களில் அதிகாலை 4 மணி முதலே போகி பண்டிகையை கொண்டாட துவங்கியுள்ளன. இதன் விளைவாக சென்னையில் காற்றின் தரக் குறியீடு என்பது 6 மணி நிலவரப்படி 193 என்று மோசமடைந்து காணப்படுகிறது. மேலும் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையை பொறுத்தமட்டில் மணலியில் காற்றின் தரக்குறியீடு 277, ஆலந்தூரில் 125, அரும்பாக்கம் 200,ராயபுரம் 199, பெருங்குடி 277, எண்ணூர் 217 என்று மோசமான நிலையை அடைந்திருக்கிறது.
முன்னதாக குறிப்பாக சென்னை- டெல்லி, சென்னை- மத்திய பிரதேசம், சென்னை- காஷ்மீர் உள்ளிட்ட 16 உள்நாட்டு சேவைகள் பாதிக்கப்பட்டது என்றும், சிங்கப்பூர் , மலேசியா உள்ளிட்ட 8 பன்னாட்டு விமானங்கள் தரையிறங்குவதற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இப்படி ஒட்டுமொத்தமாக 24 விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியான வெளியாகி தற்காலிகமாக விமான சேவையை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது விமான சேவை சீரடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.