ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறைக்கு காவல்துறை எந்தவகையிலும் காரணம் அல்ல. அதிகம் காயப்பட்டதே நாங்கள் தான் என சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் சேஷசாயி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவங்களில் காவல்துறை தரப்பில் அதிகபட்சமாக 142 பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மாணவர் போராட்டத்தை காவல்துறையினர் பொறுமையாகக் கையாண்டபோது, சில சமூக விரோதிகள் உள்ளே புகுந்து வன்முறைச் சம்பங்களை அரங்கேற்றியதாக சேஷசாயி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒருசில காவலர்கள் தவறுசெய்தார்கள் என்பதற்காக, ஒட்டுமொத்த காவல்துறையினரையும் குற்றம்சாட்டுவது சரியல்ல என்றும் , நடுக்குப்பம் வன்முறைச் சம்பவம் தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.