சென்னை: தொடர்ந்து 4 மணிநேரம் ப்ளங்க் உடற்பயிற்சி செய்து உலகசாதனை படைத்த மாணவன்

சென்னை: தொடர்ந்து 4 மணிநேரம் ப்ளங்க் உடற்பயிற்சி செய்து உலகசாதனை படைத்த மாணவன்
சென்னை: தொடர்ந்து 4 மணிநேரம் ப்ளங்க் உடற்பயிற்சி செய்து உலகசாதனை படைத்த மாணவன்
Published on

சென்னை ஆவடியில் கடின உடற்பயிற்சியான ப்ளங்க் என்ற உடற்பயிற்சியை தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு மேல் செய்து 8 ஆம் வகுப்பு மாணவன் உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னை ஆவடி சிஆர்பிஎப் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஹெமலதா, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் காவலராக பணியாற்றியவர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மகன் சுபாஷ் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், சுபாஷுக்கு சிறுவயது முதலே தற்காப்பு கலையின் மீது ஆர்வம் இருந்தது. இதனால் அவரது பெற்றோர் கராத்தே, பாக்சிங் போன்ற கலைகளை கற்றுக் கொடுத்தனர். இதையடுத்து தற்காப்பு கலையை பயின்று வரும் சுபாஷ், வயிற்று தசையை வலுப்படுத்தும் கடின பயிற்சியான ப்ளங்க் எனும் பயிற்சியை கற்றுவந்தார்.

சாதாரணமாக இந்த பயிற்சியை ஒரு நிமிடம் செய்வதே கடினம். ஆனால், சுபாஷ் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு மேல் செய்து சாதனை படைத்துள்ளார். இதுவே உலக அளவில் சாதனையாக உள்ளது .இதற்கு முன்பாக மும்பையைச் சேர்ந்த சிறுமி 2 மணி நேரம் செய்ததே சாதனையாக இருந்தது. அதனை சுபாஷ் முறியடித்துள்ளார்.

இந்த சாதனையை செய்யும் போது தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவின் விழிப்புணர்வு காணொளியை பார்த்துக்கொண்டே செய்தார் இது லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த சிறுவனை ஆவடி மத்திய பாதுகாப்பு படை டி.ஐ.ஜி தினகரன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் சிறுவனின் சாதனை கின்னஸ் சாதனையிலும் இடம் பெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com