சென்னை அருகே அமைய இருக்கின்ற 10 வழிச்சாலை திட்டம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த சாலை எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து தச்சூர் திருவள்ளூர் புறவழிச்சாலை, ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோவில், மாமல்லபுரம் பூஞ்சேரி வரை இந்த சாலை கட்டமைக்கப்பட இருக்கிறது.
சாலை
சாலைபுதியதலைமுறை
Published on

சென்னை புறநகர் பகுதியில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ஒரு புது திட்டமானது வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது என்ன திட்டம் என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் மிகப்பெரிய கட்டமைப்பில் ஒன்றான சாலை வசதியானது சென்னை புறநகர் பகுதியில் 10 வழிச்சாலையாக அமைய இருக்கிறது. இந்த சாலை எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து தச்சூர் திருவள்ளூர் புறவழிச்சாலை, ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோவில், மாமல்லபுரம் பூஞ்சேரி வரை இந்த சாலை கட்டமைக்கப்பட இருக்கிறது.

சுமார் 132 கி.மீ தூரமும் 196 அடி அகலமும் கொண்ட இந்த சாலையை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து கட்டமைக்கிறது அதற்காக சுமார் 12361 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன் முதல் கட்டமாக ரூ. 2673 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com