சென்னை அபிராமபுரத்தில் 9-வது மண்டலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவாக்சின் பற்றாகுறையால் இரண்டாவது டோஸ் போட வந்தவர்கள் மூன்று நாட்களாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கோவாக்சின், கோவிசீல்டு ஆகிய இரண்டு வகை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.இந்தநிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அவர்களின் பலர் இரண்டாவது டோஸ் கிடைக்காமல் நின்று கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இருப்பதாகவும், மற்றவர்கள் இன்னும் 3 நாட்கள் கழித்து வருமாறும் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி போட வந்தும் பற்றாக்குறை இருப்பதால் எங்களால் செலுத்திக்கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் குற்ற்சாட்டை முன்வைக்கின்றனர்.
கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாகியுள்ள நிலையில், தற்போது பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சில இடங்களில் தடுப்பூசி பாற்றாகுறை இருப்பதால், அவற்றை நிவர்த்தி செய்ய சுகாதார துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
- ந.பால வெற்றிவேல்