"செங்கல்பட்டு தடுப்பூசி மையம் - யாரும் டெண்டர் எடுக்கவில்லை" - ஹர்ஷ்வர்தன்

"செங்கல்பட்டு தடுப்பூசி மையம் - யாரும் டெண்டர் எடுக்கவில்லை" - ஹர்ஷ்வர்தன்
"செங்கல்பட்டு தடுப்பூசி மையம் - யாரும் டெண்டர் எடுக்கவில்லை" -  ஹர்ஷ்வர்தன்
Published on

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க யாரும் டெண்டர் கோர முன்வரவில்லை என பதவி விலகும் முன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள ஹர்ஷ்வர்தன், பொதுத்துறை நிறுவனமான ஹெச்.எல்.எல் பயோட்டெக் லிமிடெட் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில், தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த வளாகத்தை தனியாருக்கு ஏலம் விடுவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதியே வெளியிடப்பட்டதாகவும், அதன் இறுதி நாளான ஏப்ரல் 14ஆம் தேதி வரை யாரும் டெண்டர் கோரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே டெண்டர் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டதாகவும், அவ்வாறு நீட்டிக்கப்பட்டும் கூட யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை பயன்படுத்துவது குறித்து வேறு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என சுகாதாரத்துறை ஆலோசிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com