செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை
செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை
Published on

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தை வார்டில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் சராசரியாக, 8000 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில், 1000 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் குணமடைந்து வீட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று இரவு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் இருக்கும் பகுதியில் மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து தரையில் விழுந்தது. நல்வாய்ப்பாக குழந்தையின் மீது ஒரு கல் கூட விழவில்லை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததை பார்த்த பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு அங்கிருந்த குழந்தைகளை தூக்கிக் கொண்டு மற்றொரு வார்டுக்கு சென்று விட்டார்கள்.

ஏற்கனவே இந்த வார்டில் மேற்கூரை முழுவதுமாக பெயர்ந்து இருக்கிறது, அதை முறையாக சீர் அமைக்காமல் மேற்கூரை இடிந்து விழுந்தால் தரையில் விழாத வண்ணம் தர்மாகோல் சீட்டை வைத்து மறைத்து வைத்திருக்கிறார்கள். தற்போது தர்மாகோல் சீட் உடைத்துக்கொண்டு மேற்கூரையின் ஒரு பகுதி தரையில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக தெரிவித்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வர், இச்சம்பவம் பேரதிர்ச்சியாக உள்ளது, உடனடியாக பொதுப்பணித்துறை கட்டடப் பிரிவு அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com