கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
Published on

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3,307 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் சென்னையில் கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுதாங்கல், திருமங்கலம், பெரம்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், திருவான்மியூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

இந்நிலையில், கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறக்கப்பட்டன. 24 அடி உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 23 அடி நீர் நிரம்பிய நிலையில், பிற்பகல் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது. தற்போது ஏரியில் கொள்ளளவு முழுவதுமாக நிரம்பிய நிலையில், நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஏரிக்கு நீர்வரத்து 6,200 கன அடியாக உள்ள நிலையில், நீர் திறப்பு 3,307ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com