நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது, “ தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவும்.

அதே போல ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் சென்னை உள்பட தமிழகத்தின் 22 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com