அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
Published on

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. உள்மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் 7 சென்டி மீட்டர் மழையும், மாமல்லபுரத்தில் ஆறு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com