வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... நாளை எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு?

தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22-ஆம்தேதி காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழக கடலோரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்கிழமை மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வடகிழக்குத் திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் 24 ஆம்தேதி மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com