குமரி கடல் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மாலத்தீவு அருகே வங்கக்கடலில் உருவான மற்றொரு தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதாகவும் வானிலை மையம் கூறியிருக்கிறது. இதனாலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதர கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மாநகரில் நேற்றிரவு முதல் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது.