சென்னையில் பருவமழை பாதிப்புகள் குறித்து மத்தியக் குழு இன்று ஆய்வு நடத்தினர்.
பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் இன்று முதல்கட்டமாக சென்னையில் ஆய்வு நடத்தினர். மத்திய நிதித்துறை இணை இயக்குனர் முகேஷ் குமார், மத்திய நீர்வளத்துறை இணை இயக்குனர் நாகமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆய்வு நடத்த சென்றனர்.
ராயபுரம், பெரம்பூர், ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அண்ணா நகர் பகுதிகளில் மழை பாதிப்புகளையும் பார்வையிட்டனர். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் துறை செயலாளர் சந்திரமோகன், இரண்டு நாட்கள் ஆய்வுக்கு பின்னர் மாநில அரசுடன் ஆலோசித்து மத்திய அரசிடம் இக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்றார்.