சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டம்| “ரூ.7,425 கோடியில் ஒரு ரூபா கூட கொடுக்கல” - அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆவது கட்ட திட்டத்தை central sector project ஆக அங்கீகரித்து மத்திய அரசின் பங்கான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
நிர்மலா சீதாராமன், தங்கம் தென்னரசு
நிர்மலா சீதாராமன், தங்கம் தென்னரசுpt web
Published on

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்

மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக விரிவான விளக்கம் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்கோப்பு படம்

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை மத்திய அரசு பெற்றுத் தந்தது என்றும், அதில் தமிழக அரசு 5 ஆயிரத்து 880 கோடி ரூபாய் மட்டுமே செலவு மேற்கொண்டது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் 2ஆவது கட்டம் state sector project ஆக நடைமுறைப்படுத்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசுகோப்புப் படம்

சென்னை மெட்ரோ ரயில் 2ஆவது கட்டம் 2017ஆம் ஆண்டில் central sector project- ஆகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. கடன் ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திடவேண்டும் என்று JICA நிறுவனம் கேட்டுக்கொண்டது.

நிர்மலா சீதாராமன், தங்கம் தென்னரசு
20-ம் ஆண்டில் தேமுதிக| விஜயகாந்தின் குதிரைப்பாய்ச்சலில் மிரண்ட அரசியல் களம்; தற்போதைய நிலை என்ன?

தமிழ்நாடு அரசே திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது 

central sector project என்று மத்திய அரசு ஒப்புதலை எதிர்நோக்கி காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசே இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது. இந்த திட்டம் மத்திய அரசின் பொது முதலீட்டு குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு central sector project ஆக செயல்படுத்த மத்திய அமைச்சரவைக்கு முன்மொழிந்தது.

மத்திய அரசின் பொது முதலீட்டு குழு பரிந்துரைத்தப்படி சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆவது கட்ட திட்டத்தினை central sector project ஆக அங்கீகரித்து மத்திய அரசின் பங்கான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

நிர்மலா சீதாராமன், தங்கம் தென்னரசு
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் | 21 தங்கம் வென்று இந்தியா முதலிடம்! 2 தங்கம் வென்ற தமிழ்மகள்!

ரூ.7,425 கோடியில் 1 ரூபாய் கூட விடுவிக்கப்படவில்லை

இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 5 ஆயிரத்து 880 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தங்கம் தென்னரசு, உண்மையில் இதுவரை 18 ஆயிரத்து 564 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை 11 ஆயிரத்து 762 கோடி என குறிப்பிட்டுள்ளார். பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அரசின் பங்கான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயில் ஒரு ரூபாய் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

2024-25 நிதிநிலை அறிக்கையில் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கெல்லாம் உரிய நிதி மற்றும் சார்நிலைக்கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ள அமைச்சர், தமிழ்நாட்டிற்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஏன் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் திட்டங்களை தொய்வுபடுத்தவும், மாநில அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்படுகிறதோ என்று ஐயம் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த திட்டத்தை central sector project ஆக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசின் கடன் சுமையை குறைத்திட வழிவகை செய்ய வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிர்மலா சீதாராமன், தங்கம் தென்னரசு
அப்படியா..! அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை மழையை உருவாக்க மத்திய அரசு திட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com