கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை சேமிப்பதால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில், கூடங்குளம் அணுக்கழிவு தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மேலாண்மை அமைப்பு 2013-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒன்றாவது மற்றும் இரண்டாவது அணு உலை கழிவுகளால் அப்பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. கூடங்குளம் அணு உலையால் அப்பகுதியில் ஏற்படும் கதிர்வீச்சின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள ஜிதேந்திர சிங், கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது வரை அணுக்கதிர் வீச்சு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.