மீனவர் துயரங்களுக்கு முடிவு... பாம்பன் பகுதியில் துறைமுகம்

மீனவர் துயரங்களுக்கு முடிவு... பாம்பன் பகுதியில் துறைமுகம்
மீனவர் துயரங்களுக்கு முடிவு... பாம்பன் பகுதியில் துறைமுகம்
Published on

மீனவர் துயரங்களுக்கு விடிவு காணும் விதத்தில், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாம்பன் குந்துகால் பகுதியில் புதிய துறைமுகம் அமைகிறது. மீனவர்களின் கோரிக்கையை ஏற்று துறைமுகம் அமைய உள்ள பகுதியில், மீன்வளத்துறை செயலாளர் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

1976ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தபடி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் மீன்பிடி எல்லை குறுகிவிட்டது. இதனால் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க புறப்படும்போதும், இலங்கை எல்லையை எளிதாக அடையும் சூழல் உள்ளது. இதை தவிர்க்கும் வகையிலும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏதுவாகவும், பாம்பனில் துறைமுகம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று, மீன் இறக்கு தளம், படகு நிறுத்தம், தூண்டில் வளைவு ஆகியவற்றை உள்ளடக்கிய மீன்பிடி துறைமுகம் மன்னார் வளைகுடா பகுதியான பாம்பன் குந்துகாலில் அமைய உள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று ராமேஸ்வரம் வந்த தமிழக மீனவளத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், மீன்வளத்துறை உயர் அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சென்று, ககன்தீப்சிங் பேடி பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், பாம்பன் குந்துகால் துறைமுகம் மூலமாகவும், 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும் மூக்கையூர் துறைமுகம் மூலமாகவும், மீனவர்கள் துயரத்திற்கு விடிவு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com